நடுவீதியில் மோசமாக மோதிக் கொண்ட இளம் பெண்களால் ஏற்பட்ட சர்ச்சை

Report Print Vethu Vethu in சமூகம்

நீர்கொழும்பில் கடுமையாக மோதிக் கொண்ட பெண்களில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எண்ணெய் சட்டி ஒன்றில் பந்து விழுந்த சம்பவம் தொடர்பில் பெண்கள் இருவர் நடுவீதியில் கடுமையாக மோதிக் கொண்டனர்.

இதன்போது பெண் ஒருவர் மற்றைய பெண்ணை தாக்கியமையினால் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவர்கள் சிலர் விளையாடி கொண்டிருந்த போது பந்து ஒன்று எண்ணெய் தாச்சிக்குள் விழுந்துள்ளது. இதனால் விளையாடிய சிறுவனின் தாய்க்கும் சமைத்து கொண்டிருந்த பெண்ணுக்கும் இடையில் வீதியில் மோதல் ஏற்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers