குடும்ப தகராறு - மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை

Report Print Vethu Vethu in சமூகம்

களனியில் மகனை கத்தியால் குத்தி தந்தை ஒருவர் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி, போல்லேகல, கோனவல பிரதேசத்தில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை இவ்வாறு மகனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் காரணமாக 26 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். கொலை செய்து விட்டு தந்தை பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தந்தையை கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers