திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை கோரி மனு! யாழ். நீதிமன்றில் சுமந்திரன் முன்னிலை

Report Print Rakesh in சமூகம்

யாழ். நல்லூரியில் தியாக தீபம் திலீபனின் தூபிப் பகுதியில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யுமாறு கோரி பொலிஸார் சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் அதற்கு முதல் நாள் - அதாவது நாளை மறுதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் நீதிமன்றில் பிரசன்னமாகி, பொலிஸ் விண்ணப்பத்துக்கு எதிராக வாதிடுவார் எனத் தெரியவருகின்றது.

ஏற்கனவே வேறு ஒரு வழக்குக்காக அன்றைய தினம் யாழ். நீதிமன்றத்தில் பிரசன்னமாக வேண்டிய தேவை அவருக்கு இருப்பதால், இந்த வழக்கையும் சேர்த்து அவர் கவனித்துக்கொள்வார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Latest Offers