இலங்கை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கையில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் நுகர்வோருக்கு சலுகைகள் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மகிழ்ச்சியான தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

90 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு இலங்கை மின்சாரசபை சலுகைக் கட்டண அடிப்படையில் எல்.ஈ.டி மின் குமிழ்களை வழங்க உள்ளது.

மின்மானி வாசிப்பாளர்களினால் எதிர்வரும் நாட்களில் இவ்வாறு மின்குமிழ்கள் வழங்கப்பட உள்ளன.

பத்து இலட்சம் மின் குமிழ்கள் இவ்வாறு வழங்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் 304 மெகாவோட் மின்சாரத்தை சேமிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இருபது இலட்சம் மின் பயனர்கள் சாதாரண மின்குமிழ்களையே பயன்படுத்தி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers