11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் சாட்சியமளித்த அதிகாரிக்கு கடற்படையினரால் துன்புறுத்தல்

Report Print Ajith Ajith in சமூகம்

2008ம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் சாட்சியமளித்த தமக்கு துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக கடற்படை அதிகாரியான லெப்டினட் கொமாண்டர் நிலை அதிகாரியான கிருஸ்ஸான் வெலகதர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டை செய்துள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் கடத்தப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 2012ம் ஆண்டு இந்த கடற்படை அதிகாரி தமது சாட்சியத்தை வழங்கியிருந்தார்.

அவரின் சாட்சியம் காரணமாக கடத்தப்பட்ட இளைஞர்கள் திருகோணமலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடம் தொடர்பிலும், அவர்களின் இறுதித்தருணங்கள் தொடர்பிலும் தகவல்களை அறிந்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

இந்த நிலையில் குறித்த சாட்சியத்தை வழங்கிய பின்னர் தமக்கு கடற்படைக்குள் துன்புறுத்தல் நிலை ஏற்பட்டதாகவும், தமக்கு பதவியுயர்வும் மறுக்கப்பட்டதாக லெப்டினன்ட் கொமாண்டர் கிருஸ்ஸான் வெலகதர முறையிட்டுள்ளார்.

Latest Offers