தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடல்

Report Print Navoj in சமூகம்

தியாக தீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல் வணக்க நிகழ்வு ஏற்பாடு தொடர்பிலான கலந்துரையாடல் இன்று வெல்லாவெளியில் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது, எதிர்வரும் 26ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை ஒழுங்கு செய்தல் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்து நடாத்துவதெனவும், கோவில்போரதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக மாலை 03.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிப்பதெனவும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் போரதீவுப் பற்றுக் கிளையின் தலைவர் இ.கந்தசாமி தலைமையில் நிகழ்வு இடம்பெறுமெனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் மண்முனை மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் ஞா.யோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Latest Offers