கொழும்பில் காணொளியாக அம்பலமாகும் பெண்களின் அந்தரங்கங்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு, நுகேகொடயில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் நடவடிக்கைகளை காணொளிகளாக பதிவிட்டு விற்பனை செய்யும், நடவடிக்கை ஒன்றும் குறித்த விபச்சார விடுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுகேகொட ஹைலெவல் வீதியில் உள்ள இரண்டு மாடி கட்டடம் ஒன்றில் செயற்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி இந்த சுற்றிவளைப்பில், பல பெண்கள் உட்பட முகாமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 35 - 40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்கு 3500 ரூபா பணம் செலவிட்டு ஒரு நபரை சேவை பெற்றுக் கொள்வதற்காக அனுப்பியே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு 3500 முதல் 10000 ரூபா வரையில் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பிரபுக்கள் மற்றும் கோடீஸ்வரர்களும் அங்கு சேவை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அங்கு சேவை பெற்றுக் கொள்ள வருபவர்களுக்கு தெரியாமல் கமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த கமராவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதற்கமைய விபச்சார விடுதியில் எடுக்கப்படும் காணொளிகளும் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பல பகுதிகளிலுள்ள பெண்களை வலுக்கட்டயாமாக அழைத்து வரும் கும்பல் ஒன்று இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. இதற்காக பெண்களை மயக்கும் இரசாயன பதார்த்தங்கள் பயன்படுத்துவதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

Latest Offers