தலவாக்கலையில் இன்று அணிதிரளுங்கள்! - திகாம்பரம் அறைகூவல்

Report Print Rakesh in சமூகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் இன்று தலவாக்கலையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமாகிய அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்களும், அமைப்புகளும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

கட்சி பேதங்கள் மறந்து அனைத்து மலைநாட்டு சொந்தங்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு தொழிலாளர்களின் கரங்களைப் பலப்படுத்துமாறு தொழிலாளர் தேசிய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Latest Offers