சமய பயிலுனர் ஆசிரியர்களின் வயதெல்லை 30 ஆக அதிகரிக்கப்படவுள்ளது - இம்ரான் எம்.பி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கல்வியியல் கல்லூரிகளுக்கு இந்து, இஸ்லாம் சமய பாடங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் பயிலுனர் ஆசிரியர்களின் வயதெல்லை 30 ஆக அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கல்வியியல் கல்லூரிகளுக்கு பௌத்த, கத்தோலிக்க சமய பாடங்களுக்கு பயிலுனர் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் வயதெல்லை 30 ஆகவும், இந்து, இஸ்லாம் சமய பாடங்களுக்கு 25 ஆகவும் காணப்படுகிறது.

இதனால் இந்து இஸ்லாம் சமய பாடங்களுக்கு இணைத்துக்கொள்ளும் ஆசிரியர்களின் வயதெல்லையையும் 30 ஆக அதிகரிக்குமாறு பல தரப்புக்களாலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக சுட்டிகாட்டியதை அடுத்து இந்து, இஸ்லாம் சமய பாடங்களுக்கான வயதெல்லையையும் 30 ஆக அதிகரிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதாக அமைச்சர் வாக்குறுதி அளித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers