சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணியான விரிவுரையாளர்! சந்தேகநபர் ஒருவர் கைது

Report Print Murali Murali in சமூகம்
1774Shares

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது, பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று முன்தினம் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

திருமலையில் கரையொதுங்கிய தமிழ் பெண் விரிவுரையாளரின் சடலம் தொடர்பில் மரண விசாரணைகள் நிறைவடைந்துள்ளன,

திருகோணமலை மாவட்ட மேலதிக நீதவான் சம்பா ரத்னாயக்க முன்னிலையில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனபெண்ணின் சடலம் அவரின் கணவரினால் இதன் போது அடையாளங்காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பெண் விரிவுரையாளரின் உறவினர்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த பெண் நீரிழ் மூழ்கியமையின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.