ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - சிரிமாபுற பகுதியில் 30 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரை எதிர்வரும் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்கவின் வாசஸ்தலத்திற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை, சிறிமாபுர பகுதியை சேர்ந்த 55 வயது உடைய எம்.சங்கதாச என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே 8 குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகவும், அதில் ஒரு குற்றச்சாட்டுக்கு திருகோணமலை நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் நீதவானின் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.

Latest Offers