மூன்றாவது மாடியிலிருந்து இயற்கையை ரசித்த சீனப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Manju in சமூகம்

நுவரெலியா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து சீன பெண்ணொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று காலை குறித்த பெண், சுற்றுலா விடுதியின் மூன்றாம் மாடியில் இருந்து இயற்கையை இரசித்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் படுகாயமடைந்த குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன சுற்றுலா பயணிகள் குழுவுடன் நேற்று நுவரெலியாவிற்கு சென்ற 34 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் தலையில் ஏற்பட்ட பலத்த காயமே உயிரிழப்பிற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சீனப் பெண்ணின் உடல் நுவரெலியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Latest Offers