தியாகி திலீபனின் நினைவு நாள்! முன்னாள் போராளியின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட மாவை

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொருத்தமானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளி மு.மனோகர் (காக்கா அண்ணா) இன்று மாவையின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலைமை தொடர்பாக சுட்டிக்காட்டியபோதே அவர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாங்கள் இந்த விடயத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென காக்கா அண்ணா விடுத்த கோரிக்கைகளை மாவை சுனாதிராஜா ஏற்றுக்கொண்டார்.

எனினும், திலீபன் நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸ் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், அதற்கெதிராக சுமந்திரன் வாதாட இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளின் பின்னணியில் நல்ல நாடகம் அரங்கேறுகிறது எனக் காக்கா அண்ணா தெரிவித்த கருத்தை அவர் நிராகரித்தார்.

எப்படியிருந்தாலும் கடந்த வருடம் இதே இடத்தில் களியாட்டமாக நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்றவரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வை நடத்துவது பொருத்தமற்றது என காக்கா அண்ணா சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், அன்றைய நினைவு நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் பற்றி மாவை சேனாதிராஜா கேட்டபோது அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனக் காக்கா அண்ணா பதிலளித்தார்.

Latest Offers