சிறுமியை காதலித்த இளைஞன் செய்த காரியம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியொருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச்சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார்.

பூநகரி, ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் சீனன்வெளி பகுதியிலுள்ள பதினான்கு வயதுடைய சிறுமியை பத்து மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சிறுமியை அவரின் பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்று தனது உறவினர் ஒருவரின் வீட்டில் மூன்று நாட்களாக தங்கி இருந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் சேருநுவர பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான்முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சேருநுவர கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers