காட்டுயானைகளின் தொல்லைகளால் ஊரை விட்டு வெளியேறும் மக்கள்

Report Print Nesan Nesan in சமூகம்

நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட வீரச்சோலை கிராம மக்கள் காட்டு யானைகளின் தொல்லைகளால் தினமும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மாலை வேளைகளில் ஊருக்குள் புகும் காட்டுயானைகள் இரவு முழுவதும் மக்களின் வீடுகள் வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் உபகரணங்கள் உடமைகளை சேதப்படுத்துவதால் அச்சத்தில் கிராம மக்கள் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர்.

நேற்றிரவு தங்கராசா சிவலிங்கம் என்பவருடைய அரிசி ஆலைக்குள் புகுந்த காட்டு யானை அரிசி ஆலையின் சுவரை உடைத்து இயந்திரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆலையின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,

சிறியரக இயந்திரங்களை கொண்டு இயங்கும் இந்த ஆலையினூடாகவே தங்களது ஜீவனோபாயம் நடக்கிறது.

இரண்டாவது தடவையாக யானையின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பல தடவைகள் வனவிலங்கு இலாக்காவிற்கு அறிவித்தல் கொடுத்தும் வருகைதரவில்லை.

உயிரை கையிலெடுத்துக்கொண்டு வாழ்வதை விடுத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து யானைகளை அப்புறபடுத்தி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்குமாறு வேண்டினார்கள்.

இங்கே கருத்துரைத்த கிராம மக்கள், விவசாயத்தையும் பயிர்ச்செய்கையையும் நம்பி வாழும் பிரதேச மக்கள் யுத்தகாலத்தில் கூட காட்டுயானை தொல்லை இருக்கவில்லை.

ஆனால் இப்போது வாழை, கரும்பு ,தென்னை, வேளான்மை போன்றவற்றை அழித்து வருகின்றது. அறுவடை செய்து உணவிற்காக வைத்த நெல்மூட்டைகளை வீட்டை உடைத்து யானை உணவாக்கி கொள்கின்றது.

இரவிலே வயல்வெளிக்கு நீர்பாய்ச்ச செல்கின்றவர்களை யானை அடித்து கொல்கின்றது. இரவு நேரத்தில் வைத்திய சாலைக்கு கூட செல்லமுடியாத நிலையில் இருக்கின்றனர். இதனை கருத்திற் கொண்டு மின்சார வேலியோ அல்லது யானைகளை காட்டிற்கு விரட்டி விட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளையோ மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers