புகையிரத விபத்தில் பரிதாபமாக பலியான 2 மாத குழந்தை

Report Print Jeslin Jeslin in சமூகம்

ஹபராதுவ - கொக்கலவிற்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரதத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை ஒன்று பலியானதோடு நால்வர் படுகாயடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹபராதுவ மற்றும் கொக்கல ஆகிய பகுதிகளுக்கிடையில் பயணித்த கார் ஒன்று ரயிலுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் குறித்த காரில் பயணித்தவர்களில் நால்வர் படுகாயமடைந்ததோடு 2 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது

இந்நிலையில், குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers