யாழில் குற்றவாளிகளுக்கு துணைபோகும் தமிழ் பொலிஸார்

Report Print Sumi in சமூகம்

கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இடம்பெறும் வாள்வெட்டு அட்டகாசம், ரவுடிஷம் கஞ்சா பாவனையைக் பொலிஸார் கட்டுப்படுத்த வேண்டும் என புதிய செம்மணி வீதி பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செம்மணி வீதி கிராம சமூக அமைப்புகளிடம் குறித்த பிரச்சனைகள் தொடர்பாக பல முறைப்பாடுகளை வழங்கியும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்காது அமைதிகாத்து வருவது குறித்து பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குற்றவாளிகளுக்கு சில தமிழ் பொலிஸார் துணைபோவதாகவும் மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Latest Offers