குருநாகல் தொடக்கம் ஹபரணை வரை புதிய ரயில் பாதை

Report Print Aasim in சமூகம்

குருநாகல் தொடக்கம் ஹபரணை வரை புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிக்க அரசாங்கம் வௌிநாட்டுக் கடனுதவியைப் பெற்றுக் கொள்ளவுள்ளது.

குருநாகலையில் இருந்து தம்புள்ளை ஊடாக ஹபரணை வரை நிர்மாணிக்கப்படும் இந்தப் புதிய ரயில் பாதை சுமார் 88 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டிருக்கும்.

இதன் நிர்மாணத்துக்காக ஒரு பில்லியன் டொலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான நிதியை அரசாங்கம் சீனாவின் எக்சிம் வங்கியில் இருந்து கடனாக பெற்றுக் கொள்ளவுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் போக்குரவத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிதியமைச்சின் அறிக்கை கிடைக்கும் வரை அதற்கான அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதியின் பொலன்னறுவை எழுச்சி செயற்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் துணை செயற்திட்டங்களில் ஒன்றாக இந்த ரயில் பாதை நிர்மாணம் நடைபெறவுள்ளதால் ஏனைய புறக்காரணிகளை ஒதுக்கி அரசாங்கம் இச் செயற்திட்டத்தில் தீவிர முனைப்புடன் ஈடுபடும் என்று கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest Offers