கல்விக் கண்காட்சி பிரதியமைச்சரால் ஆரம்பிப்பு

Report Print Mubarak in சமூகம்

கண்டி மாவட்டத்தில் பன்வில்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹுலுஹங்க முஸ்லிம் வித்தியாலத்தின் கல்விக் கண்காட்சி நிகழ்வினை தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று காலை கல்லூரியின் முதல்வர் இத்ரீஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்தும் குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா கலந்து கொண்டதுடன் முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தவிசாளரும் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினருமான எ. என் நயீமுல்லாஹ் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த கல்விக் கண்காட்சி இன்றும் நாளையும் பாடசாலை வளாகத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.