இலங்கையையும் விட்டு வைக்காத பிக்பாஸ் வைரஸ்! தமிழ்நாடு சென்ற தமிழ் குடும்பம்

Report Print Dias Dias in சமூகம்

தென்னிந்தியாவில் பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தியிருந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பலரின் வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்தியாவில் மாத்திரமன்றி உலகவாழ் தமிழ் மக்களின் மிக விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது.

குறித்த நிகழ்ச்சியின் இறுதி நாள் பிரம்மாண்ட நிகழ்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தன.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ரித்விகா வெற்றி வாகை சூடியிருந்தார்.

இந்நிலையில், அங்கு போட்டியிட்ட 16 போட்டியாளர்களுக்கும் தனியான ஒரு ரசிகர் வட்டம் இருந்து வந்தது. அத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதி நிகழ்வு தொடர்பான எதிர்ப்பார்ப்பு அனைத்து ரசிகரிடத்திலும் மிகுந்து காணப்பட்டது.

100 நாட்களைத் தாண்டி பிக்பாஸ் இல்லத்தில் தங்கியிருந்து இறுதிவரை சென்றிருந்த ரித்விக்கா, ஐஸ்வர்யா, விஜயலக்ஷமி, ஜனனி ஆகியோரை காண அவர்களது ரசிகர்கள் படையெடுத்திருந்தனர்.

இதேபோல, பிக்பாஸ் சீசன் 2 இல் இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்ட ஐஸ்வர்யாவை காண்பதற்கு இலங்கையில் இருந்து ஒரு தமிழ் குடும்பம் சென்றுள்ளது. அங்கு சென்று, ஐஸ்வர்யாவிடம் கதைத்து தமது மகிழ்ச்சியையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

Latest Offers