திடீரென உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர்

Report Print Vethu Vethu in சமூகம்

பிரபல சிங்கள நகைச்சுவை நடிகரும் பாடகருமான ரொனி லீச் திடீரென மரணமடைந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 65.

அவுஸ்திரேலியாவுக்கு கலைப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிழமை சென்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த நிகழ்ச்சியின் பின்னர் அவர் இன்று மாலை நாடு திரும்ப திட்டமிட்டிருந்தார். எனினும் எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் பிரபல நகைச்சுவை நடிகராக ரொனி லீச் திகழ்கிறார். இவர் பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடங்களில் நடித்துள்ளார்.

புகழ் பூத்த பல்வேறு சிங்கள பொப்பிசை பாடல்களை ரொனி லீச் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers