அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தில் மேலும் இருவர் இணைவு!

Report Print Rakesh in சமூகம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளுடன் மேலும் இரண்டு அரசியல் கைதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இணைந்துள்ளனர்.

இதனையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புருசோத்தமன் அரவிந்தன், வவுனியாவைச் சேர்ந்த நல்லான் சிவலிங்கம் ஆகிய இருவருமே நேற்று முதல் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, உண்ணாவிரதக் கைதிகள் தமக்கான மருத்துவ உதவிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

Latest Offers