பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய இல்லத்தில் திருட்டு

Report Print Ajith Ajith in சமூகம்

பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய இல்லத்தில் இருந்து 70 ஆயிரம் மதிப்புள்ள உடமைகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் அதியுயர் பாதுகாப்பை கொண்ட பகுதியில் உள்ள உயர்ஸ்தானிகராலய இல்லத்தில் இடம்பெற்றுள்ள இந்த திருட்டு சம்பவம் பாகிஸ்தானில் தூதரகங்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாகி இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கை உயர்ஸ்தானிரக இல்ல பகுதிக்குள் பிரவேசித்தவர்கள் அங்கிருந்த மின்விளக்குகள் மற்றும் குளியலறை நீர்க்குழாய் திறப்புகள் என்பனவற்றை திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து இலங்கை தூதரகம் சார்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers