வவுனியாவில் பத்தாயிரம் பனை விதை விதைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் 10 ஆயிரம் பனை விதைப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இச் செயற்றிட்டத்தின் ஏழாவது கட்ட நடவடிக்கை நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் ஏற்பாட்டில் வவுனியா சாம்பல் தோட்டம் குளக்கரைக்கு அருகே இன்று காலை 7.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது வரையில் சுமார் 4030 பனை விதைகள் விதைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலதிகமாக 2000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.

இச் செயற்றிட்ட நடவடிக்கையில் கிராமசேவகர் நா.ஸ்ரீதரன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் க.விஜயரூபன், வெளி சஞ்சிகையின் ஆசிரியர் அருளானந்தன், அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத்தின் செயலாளர் ந.கிருஸ்ணமூர்த்தி, ஈரநிலம் அமைப்பின் தலைவர் ச.சுதன், தனியார் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் எஸ்.சுரேஸ், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு மிக ஆர்வத்துடன் பனை விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Latest Offers