வீட்டில் வைத்து பெண்ணொருவர் செய்து வந்த மோசமான காரியம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று காலை 250 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் பேராறு, கந்தளாய் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வீட்டில் கேரளா கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த நிலையிலே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers