கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கோர விபத்து! இருவர் பரிதாபமாக பலி

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ கலல்பிட்டியவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பாரவூர்தி ஒன்றும் சிற்றுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers