இரு வருடங்களில் 27 பாலியல் குற்றங்களை செய்த நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இரண்டு வருடங்களில் 27 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றவாளி ஒருவரை கொஹூவலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் நாட்டில் பல பிரதேசங்களில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபரிடம் மேற்கொள்ள விசாரணைகளில் குற்றச் செயல்கள் சம்பந்தமான தகவல்கள் கிடைத்துள்ளன.

குருணாகல் மாவத்தகமை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான இந்த சந்தேக நபர் நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி எனவும் அவருக்கு எதிராக வத்தளை, நுகேகொடை நீதினம்றங்களில் 11 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கொஹூவலை, கல்கிஸ்சை, தெஹிவளை, கண்டி மற்றும் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையங்களில் 27 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் சந்தேக நபருக்கு எதிராக பதிவாகியுள்ளதுடன் சிறிய குற்றங்கள் தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தில் 5 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த சந்தேக நபர் விசாரணைகளுக்காக பொலிஸார் தேடப்பட்டு வந்துள்ளார். சந்தேக நபர் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest Offers