15 வயதான பாடசாலை மாணவியை காணவில்லை

Report Print Steephen Steephen in சமூகம்

எம்பிலிப்பிட்டிய - பதலங்கல -தோறகல பிரதேசத்தில் 15 வயதான பாடசாலை மாணவியை கடந்த 10 நாட்களாக காணாவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தோறகல பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவி இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி பகுதி நேர வகுப்பிற்காக வீட்டில் இருந்து சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என மாணவியின் தாய் கூறியுள்ளார்.

அதேவேளை, பொலன்நறுவை மெதிரிகிரிய - யாய ஹத பிசோ பண்டாரகம பிரதேசத்தில் காணாமல் போன 10 வயதான பாடசாலை மாணவன் சீகிரிய பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் தாயாருடன் பொலன்நறுவை வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது, சிறுவன் காணாமல் போயிருந்தார். சிறுவன் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையை எழுதியிருந்தார்.

இதனிடையே பலங்கொடை சமனலவத்தை பிரதேசத்தில் காணாமல் போன 10 வயதான சிறுவன் குறித்து இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இந்த சிறுவன் காணாமல் போய் இரண்டு மாதங்களுக்கு மேல் கடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers