கைக் குண்டு மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளம் குடும்பஸ்தர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கிண்ணியா பெரியாற்று முனை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் வீட்டு காணிக்குள் கைக்குண்டு மற்றும் கேரளா கஞ்சாவை இன்று காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கிண்ணியாவைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் என தெரியவருகிறது.

குறித்த நபரை சோதனையிட்ட போது 15 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் உரியவரின் காணி வளாகத்தினுள் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை குறித்த கேரளா கஞ்சா மற்றும் கைக் குண்டுடன் கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபரை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers