நுவரெலியா வைத்தியசாலையில் தாதிமார்களின் விடுதி திறந்து வைப்பு

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா வைத்தியசாலையில் தாதிமார்களின் விடுதி தொகுதி மற்றும் கிளினிக் அறைகள், சிறுவர் பராமரிப்பு நிலையம் என்பன நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

நவீன வசதிகளை கொண்ட கட்டட தொகுதிகள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டன.

வைத்தியசாலையில் நிலவுகின்ற ஏனைய குறைபாடுகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர், அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

இதன்போது சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம், வைத்திய அதிகாரிகள், தாதிமார்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Latest Offers