இந்தியாவிற்கு சென்றுள்ள இலங்கையின் இரண்டு கடற்படை கப்பல்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் சாகர மற்றும் சுரனிமாலா என்ற இரண்டு கடற்படைக் கப்பல்கள் நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவிற்கு சென்றுள்ளன.

குறித்த இரு கப்பல்களும் நான்கு நாட்கள் பயணமாக நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்திலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இரு கப்பல்களும் நாளைய தினம் கொச்சின் துறைமுகத்தை சென்றடையவுள்ளன.

சாகர கப்பலில் 200 கடற்படையினரும், சுரனிமாலா கப்பலில் 120 கடற்படையினரும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொச்சின் துறைமுகத்தில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் பின்னர் எதிர்வரும் 11ஆம் திகதி குறித்த இரண்டு கப்பல்களும் இலங்கைக்கு திரும்பவுள்ளன.

Latest Offers