நாடாளுமன்றத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Report Print Steephen Steephen in சமூகம்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடாளுமன்றத்திற்கு வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி அமைந்துள்ள தியவன்னா ஆற்றின் நீர்மட்டமும் உயர்வடைந்து வருகின்றது.

இதன் காரணமாக வெள்ள நீர் நாடாளுமன்ற வளாகத்தில் உட்புகுவதைத் தடுக்க இராணுவத்தினர் இன்று பிற்பகல் 3 மணியளவில் பாதுகாப்பு மணல் மூட்டைகளைக் கொண்டு பதுகாப்புத் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற நுழைவாயில் உட்பட சுற்றுப்புறங்களில் இராணுவத்தினர் மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

63 இராணுவத்தினர் இந்தப் பணிகளில் ஈடுபட்டனர் என இராணுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Latest Offers