தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கு கேப்பாப்புலவில் இருந்து ஓர் அழைப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - கேப்பாபுலவில் 587 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமிழ்மக்கள் பிரதிநிதிகளுக்கு இன்று அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.

நாளை பிற்பகல் 4.00 மணிக்கு கேப்பாபுலவு போராட்ட ஈடத்திற்கு சமூகமளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இராணுவத்தினரிடம் பறிகொடுத்துள்ள எமது வாழ்விடத்தை விடுவிக்ககோரி 587 நாட்களாக சொல்லொணா துன்பம் துயரங்கள் மத்தியில் போராடிக்கொண்டிருக்கின்றோம். இன்னமும் நியாயமானத் தீர்வு கிடைக்கவில்லை.

இதற்கு நீதிகோரி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடாக கிடைக்கும் வகையில் நாங்கள் மகஜர் கையளிக்க உள்ளோம்.

அதற்காக மக்கள் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் நாளை பிற்பகல் 4.00 மணிக்கு கேப்பாப்புலவு போராட்ட இடத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுள்ளளோம் என்று தெரிவித்துள்ளனர்.

Latest Offers