பாக்கியம் புரம் கிராமத்தின் திறப்பு விழா

Report Print Thirumal Thirumal in சமூகம்

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 240 இலட்ச ரூபா செலவில் நுவரெலியா கோட்லோஜ் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 24 தனி வீடுகளைக் கொண்ட பாக்கியம் புரம் கிராமத்தின் திறப்பு விழா இன்று இடம்பெற்றுள்ளது.

அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்து, வீடுகளை திறந்து வைத்ததோடு, வீட்டு உரிமையாளர்களுக்கு காணி உறுதிப் பத்திரத்தையும் வழங்கி வைத்தமை குறிப்பிடதக்கது.

அமைச்சர் பி. திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், ஆர். இராஜாராம் மற்றும் ட்ரஸ்ட் நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி முதலானோர் கலந்து கொண்டார்கள்.

Latest Offers