7 தமிழர்களின் விடுதலை விவகாரம்! டெல்லி விரையும் எடப்பாடி

Report Print Dias Dias in சமூகம்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'டைம்ஸ் ஒப் இந்தியா' இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பு நாளை டெல்லியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ராஜூவ் காந்தி கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கும், ஆளுநர் பன்வரிலால் புரோகிற் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

டெல்லி ராஜ்பவனில் இடம்பெற்ற இந்த சந்திப்பு அரை மணிநேரம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பை அடுத்து, ஊடகவியலாளருக்கு எந்த விதமான தகவல்களையும் வழங்காத நிலையில் அந்த இடத்தை விட்டு முதல்வர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியினையும் நாளை இந்த விடயம் தொடர்பாக சந்திக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers