இலங்கைக்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ள அமெரிக்கா

Report Print Jeslin Jeslin in சமூகம்

ரஷ்யாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், ரஷ்யாவிடம் இருந்து பெருமளவிலான பாதுகாப்புத் தளபாடங்களை கொள்வனவு செய்யும் இலங்கையின் முயற்சிக்கு, பாரிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஜிபார்ட் 5.1 போர்க்கப்பல் மற்றும், கவச துருப்புக்காவிகள் (BTRs), எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்வதற்கு, ரஷ்யாவின் Rosboronoexport நிறுவனத்துடன், இலங்கை இரண்டு உடன்பாடுகளைச் செய்து கொள்வதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்ட Rosboronoexport என்ற நிறுவனம், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ஆயுத ஏற்றுமதி நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் உள்ளிட்ட இராணுவத் தளபாட விற்பனைகளுடன் தொடர்புடைய ரஷ்ய நிறுவனங்களுக்கு எதிராக, அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

2017ஆம் ஆண்டின் தடைகள் கட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஓகஸ்ட் 2ஆம் திகதி, ரஷ்ய நிறுவனங்கள் மீது தடை விதிக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டார். கிரீமிய குடாநாட்டை மீண்டும் உக்ரேனிடம் ரஷ்யா ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா கோருகிறது.

அமெரிக்கா தடை விதித்துள்ள போதிலும், கொழும்பில் உள்ள சில பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், ரஷ்யாவுடன் உடன்பாடு செய்து கொள்வதில் இன்னமும் ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.