பொது இடங்களில் இராணுவத்தினரின் செயற்பாடு! இன்று முதல் ஆரம்பம்

Report Print Ashik in சமூகம்

இலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான பணி இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் செனரத் பண்டார தலைமையில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, சர்வமத தலைவர்கள், மன்னார் நகரசபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட், மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்திசெபஸ்தியன் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.

எதிர்வரும் இரு தினங்கள் இடம்பெறவுள்ள இந்த சிரமதான பணியானது பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் இடம்பெறவுள்ளதோடு, இதில் 70 அதிகாரிகளும், 800 இராணுவ வீரர்களும் இணைத்து கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers