டாக்டர் மயிலேறும் பெருமாளுக்கு அஞ்சலி செலுத்திய முக்கியஸ்தர்கள்

Report Print Ashik in சமூகம்

நேற்றைய தினம் காலமான டாக்டர் மயிலேறும் பெருமாளுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

யுத்தகாலங்களில் கிளிநொச்சி மக்களுக்கு 1997 ஆம் ஆண்டில் இருந்து 2014 வரை மாவட்ட வைத்திய அதிகாரியாக டாக்டர் மயிலேறும் பெருமாள் மக்களுக்கு சேவையாற்றியிருந்தார்.

நீண்டகாலமாக வல்வெட்டித்துறையிலும் பருத்தித்துறையிலும் வைத்தயராக சேவையாற்றியுள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை யுத்தத்தின் பின்னர் இறுதிவரை பராமரித்து மருத்துவ சேவையினையும் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் டாக்டர் மயிலேறும் பெருமாளுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இவர் செல்வம் அடைக்கலநாதனின் நீண்ட நாள் குடும்ப நண்பர் ஆவார்.

இவருடைய உடலுக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா, நகரசபை உறுப்பினர்கள் சிவஞானசுந்தரம், ஜெகன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Latest Offers