இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்த ஆயர்

Report Print Ashik in சமூகம்

இராணுவத்தினர் மேற்கொள்ளும் சிரமதான பணிகள் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக நாம் நன்றி கூறுகின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54ஆவது படை பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான பணி இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54ஆவது படை பிரிவின் ஏற்பாட்டில் மன்னாரில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சிரமதான பணிகள் மன்னாரிலும் இடம்பெறுகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.

எமது நாட்டிலே டெங்கு நோய் மக்களை மிகவும் பாதித்துள்ளது. இராணுவத்தினர் எடுக்கின்ற இந்த முயற்சிகள் நல்லதொரு விளைவை எமக்கு கொண்டு வர வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.

அத்துடன் இராணுவத்தினர் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து நாட்டிற்கு வளம் பெற்று தர வேண்டும் என முயற்சிக்கிறார்கள்.

இதற்காக இராணுவத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம் என தெரிவித்துள்ளார்.

Latest Offers