ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய 500 இற்கும் மேற்பட்ட மக்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்
128Shares

பத்தனை, ஸ்டோனி கிளிப் தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் மற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் என கோரி போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள ஆலயத்திற்கு முன்பாக இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்குமாறும், 1000 ரூபா சம்பள உயர்வை காலம் தாழ்த்தாமல் மலையக அரசியல்வாதிகள் பெற்று தரவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

தொடர்ந்தும், சம்பள அதிகரிப்பினை பெற்றுக் கொடுக்காவிட்டால் மாதாந்தம் வழங்கும் சந்தா பணத்தினை உடனடியாக நிறுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.