ரத்தொழுகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம்! சந்தேக நபரை அடையாளம் கண்ட பொலிஸார்

Report Print Manju in சமூகம்

ஜா-எல-ரத்தொழுகம வீடமைப்புத்திட்டத்திற்கருகில் நேற்று துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி சந்தேக நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என ரத்தொழுகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று இரவு 9.30 மணியளவில் காரில் வந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இரண்டு பேரால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் ரத்தொழுகம கல்லவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் பல கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராக இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

Latest Offers