இலங்கையில் புகலிடம் கோரியுள்ள வெளிநாட்டவர்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

மாலைத்தீவின் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நான்கு உறுப்பினர்கள் இலங்கையில் அகதிப்புகலிடம் கோரியுள்ளனர்.

அம்ஜாட் முஸ்தபா, அஹமட் அகரம், அலி நாசாத் மற்றும் இஸ்மாயில் ஹபீப் ஆகியோரே இலங்கையில் அடைக்கலம் கோரியுள்ளதாக மாலைத்தீவின் இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த நான்குபேரும் தமது குடும்பங்களுடன் கடந்த வாரத்தில் இலங்கைக்கு தப்பிச்சென்றுள்ளதாகவும் மாலைத்தீவின் இணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மாலைத்தீவுக்கான தலைவர் இன்று மாலைத்தீவின் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

Latest Offers