யாழில் அதிகாலையில் நடந்த விபரீதம்!

Report Print Murali Murali in சமூகம்

யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர்சந்தி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை நுழைந்த வாள்வெட்டு குழுவினர் அங்கிருந்த தங்கம் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை வாள்கள் மற்றும் கத்திகளுடன் வீட்டிற்குள் நுழைந்த குறித்த குழுவினர் 18 பவுண் தங்கம் மற்றும் 4000 ரூபா பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழில் கடந்த சில தினங்களாக வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் நேற்று இரவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, கொக்குவில் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers