மத்திய அமைச்சின் ஊடாக செய்ய முடியாததை மாகாண அரசின் ஊடாக செய்தோம்!

Report Print Thirumal Thirumal in சமூகம்

செந்தில் தொண்டமானின் தந்தையின் கைது, ஆறுமுகன் தொண்டமானை பழிவாங்குவதற்காக அரசியல்வாதிகளின் பின்னணியில் நடத்தப்பட்ட நாடகம் என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்தார்.

வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான பௌதீக வளங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் இளங்கோ தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்களும் இங்குள்ள அரசியல்வாதிகளும் தொண்டமானின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தி விட பல முயற்சிகளை செய்து கைகூடவில்லை என்பதனால் இவரின் கைது நடவடிக்கையை பின்புலமாக வைத்து இழுக்கை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர்.

ஆறுமுகன் தொண்டமானின் கை சுத்தமானது. அதுபோன்று சௌமிய மூர்த்தி தொண்டமானின் குடும்பம் கோடிஸ்வரர் குடும்பம். அவர்களின் சொத்துக்களை இழந்தும் கூட ஏனைய சமூகம் போல் நமது சமூகம் வாழ வேண்டும் என சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து சேவையாற்றும் போதும், அவர்களின் குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்டதன் போதும் தெரிந்துக் கொண்ட உண்மையாகும்.

மூன்று வருடங்களுக்கு முன் ஆறுமுகன் தொண்டமானை கவிழ்த்துவிட வேண்டும் எனவும், அவரின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும் எனவும் எழுத்தப்பட்ட கதை முழுமையாக முடியவில்லை.

நான் நினைக்கின்றேன் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் அந்த கதையை முடித்து ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் படத்தை ரிலீஸ் பண்ணுவார்.

தொண்டமானுக்கு உள்ள அதிகாரம் எப்படி. இவர்கள் மூலம் எழுதப்படும் கதைக்கு உள்ள அதிகாரம் எப்படி எனவும் பார்க்கலாம்.

இ.தொ.காவை பொருத்தவரையில் யாருடைய பணத்தையும் கொள்ளையடித்து அரசியல் நடத்த வேண்டிய தேவை இல்லை. தொண்டமான் குடும்பம் சுத்தமான குடும்பம்.

சமூகத்தின் தேவையை உணர்ந்து சேவையைாற்றும் குடும்பம். எவர் எதை நினைத்தாலும் எங்களுடைய பயணம் மக்களுக்காக தொடரும். காங்கிரஸ் சக்தியான அமைப்பு.

ஆறுமுகன் தொண்டமான் சக்தியான தலைவர் என தெரிவித்த அவர் மத்திய அமைச்சின் ஊடாக செய்ய முடியாத அபிவிருத்திகளை மாகாண அமைச்சின் ஊடாக செய்வதற்கு பின்னின்றதால் தான் பல அபிவிருத்திகளையும், நியமனங்களையும் கேட்டவுடன் செய்ய கூடிய நிலைமையும் எம்மிடம் இருந்தது.

எனவே ஒற்றுமையை பலப்படுத்தி பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் சமூகத்தின் தேவைகளை செய்ய அனைவரும் ஒன்றுப்பட வேண்டும்.

பிளவுகள் ஏற்பட்டால் மற்றவர்களுக்கு இது சந்தர்ப்பங்களாகி விடும். ஆகையால் இருக்கின்ற உரிமைகளை கூட இல்லாமல் ஆகி விடும் என்றார்.

Latest Offers