சாரதியொருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய நபர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - மூதூர் பகுதியில் உழவு இயந்திர சாரதியொருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய நபரொருவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

குமாரபுரம்,கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கும்,உழவு இயந்திர சாரதியொருவருக்கும் வயல் காணிகள் தொடர்பில் ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறியுள்ளது.

இதில், கத்தியால் உழவு இயந்திர சாரதியை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, இன்று மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest Offers