சாரணர்களுக்கான பயிற்சி முகாமை திறந்து வைத்த பிரதி அமைச்சர்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நுவரெலியா ஹாவாஎலிய பீட்ரூ பகுதியில் புனரமைக்கப்பட்ட சாரணர்களுக்கான பயிற்சி முகாமை கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரண வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சாரணர்களுக்கான பயிற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த பயிற்சி முகாம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்நிகழ்வின் போது இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், சாரணர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers