வீதியில் திரண்ட 500இற்கும் மேற்பட்ட பொதுமக்கள்! கடும் எச்சரிக்கை

Report Print Thirumal Thirumal in சமூகம்

மலையக அரசியல்வாதிகள் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் முழுமனதோடு செயற்படவில்லை என பத்தனை போகாவத்தை தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமது உழைப்பிற்கேற்ற நியாயமான ஊதியத்தை கோரி இன்றைய தினம் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

போகாவத்தை நகரத்தில் ஒரு மணித்தியாலம் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் சுமார் 500இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தமது சுகபோக வாழ்க்கையை காப்பாற்றுவதற்காகவும் அவர்களின் அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் கூட்டு ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு அரசியல்வாதிகள் காய் நகர்த்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், தொழிற்சங்க அதிகாரிகள் சந்தாவை வாங்கிக்கொண்டு தங்களை ஏமாற்றுவதாகவும் சம்பள உயர்வுக்கு தொழிலாளர்கள் போராடி கொண்டிருக்கின்றபோது எந்த அரசியல்வாதிகளும் கண்டுகொள்வதில்லை எனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்கா விட்டால் சந்தா பணத்தினை நிறுத்துவோம் எனவும், வீதியில் இறங்கி பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்வோம் எனவும் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers