கிளிநொச்சியில் வீட்டுத்திட்டங்களை பார்வையிட்ட இந்திய குழுவினர்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய குழுவினர், வீட்டுத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், வீட்டுத்திட்ட பயனாளியாக தெரிவானோரையும் சந்தித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்ட மாதிரிகளை பார்வையிட்ட குழுவினர், அது குறித்து பயனாளிகளிடமும் கேட்டறிந்துகொண்டனர்.

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைக்கப்பட்ட இந்தியன் வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்ட குழுவினர் அங்குள்ள மக்களிடம் குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.

இதன்போது மக்கள் குறித்த வீடுகள் உரிய முறையில் அமைக்கப்படாமையால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக அவர்களிடம் கூறினர்.

தொடர்ந்து வீடுகள் இல்லாது தற்காலிக வாழ்விடங்களில் வாழும் மக்களின் நிலை தொடர்பிலும் நேரில் பார்வையிட்ட அவர்கள் மக்களுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடதக்கது.

Latest Offers