கனகபுரம் அன்னை வேளாங்கன்னி மாதா சிலை மாயம்!

Report Print Suman Suman in சமூகம்

கனகபுரம் அன்னை வேளாங்கன்னி மாதா ஆலயம் உடைக்கப்பட்டு அங்கிருந்த மாதா சிலை விசமிகளால் திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தேவாலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து மிக அருகில் உள்ள கிராமமான கனகபுரம் பகுதியில் காணப்படும் குறித்த ஆலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த 08.09.2018 அன்று இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை குறித்த ஆலயம் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலை விசமிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டிருக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அதிருப்தி அடைந்த ஆலய நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த ஆலயத்தில் சட்டவிரோத மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

Latest Offers