யாழில் இடம்பெற்ற விபத்தில் தந்தை படுகாயம்! மகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Report Print Sumi in சமூகம்

யாழ்.வேம்படி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் இ.போ.ச பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாகவே இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் தந்தை ஒருவர் தனது மகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போது, எதிரே வந்த இ.போ.ச பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த தந்தை யாழ்.போதனா வைத்தியசாலையிலும், மாணவி அதே வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers